கிளிநொச்சி யுத்தத்தின் பலமும் பலவீனமும்: உலக யுத்த ஆதாரத்துடன் பி. இராமனின் ஆய்வு:

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தால் அது அவர்களின் தோல்விக்கான ஆரம்பம் எனக் கொள்ளலாம். அதேநேரம் இலங்கை இராணுவம் இந்தப் போரில் வெற்றி பெற்றால் அது மகத்தான வெற்றியாக இருக்கும் என…
இந்தியாவின் முன்னாள் மேலதிக அமைச்சரவை செயலரும், சென்னையில் உள்ள தென்ஆசிய ஆய்வு (றோ)மையத்தில் பணிப்பாளருமான பி. இராமன் தெரிவித்துள்ளார்.
நடைமுறைப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகள், நன்கு பயிற்சி பெற்ற போராளிகளை கொண்டு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திடமான உறுதியுடன் போரிடுகின்றனர்.
இலங்கை இராணுவத்தினர் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அதிகமான நிதியுதவிளை கொண்டு அதிகமான ஆயுதங்களை கொண்டிருக்கின்றனர்.
எனினும் அவர்கள் நன்கு பயிற்றப்படாத திடமில்லாத வீரர்களையே கொண்டிருப்பதாக இராமன் குறிப்பிட்டுள்ளார்
கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதல்களின் போது படைத்தரப்பு அதிக இழப்புகளை சந்தித்தது. இரண்டு தரப்பும் இந்த மோதல் குறித்து தமக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டன. எனினும் இறுதியில் படைத்தரப்பின் தகவல்களை காட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவல் உண்மையானவையென புலனாவதாக இராமன் குறிப்பிட்டுள்ளார்
கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தில் படையினர் இருப்பதாகவும் “கிளிநொச்சியை புதுவருடத்திற்கு முன்னர் கைப்பற்றுவோம்” என இலங்கையின் இராணுவத் தளபதி கூறியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டியுள்ள இராமன், தற்போது சூழ்நிலையில் பயிற்றப்படாத இளம் வீரர்களை பயன்படுத்தி கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தை அவர் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கிளிநொச்சி சாவை முத்தமிடும் இடமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் உறுதிமொழியை ஒத்த உறுதிமொழியையே தென்கொரிய வடகொரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தென்கொரியாவின் தளபதி டக்ளஸ் மெக்ஆதர் தமது படைவீரர்களிடம் நீங்கள் கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு செல்லலாம் என கூறியிருந்தார்.
எனினும் கிறிஸ்மஸ் வந்தது.கிறிஸ்மஸ் சென்றது. சீனாவும் வடகொரியாவும் தொடர்ந்தும் கடும் சண்டையில் ஈடுபட்டன. பொதுமக்கள் தென்கொரிய தளபதி கூறிய கிறிஸ்மஸ் எந்த கிறிஸ்மஸ் என கேள்வி எழுப்பினர்.
இறுதியாக அந்த யுத்தம் எந்த தரப்புக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி இரண்டு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானதுடன் முடிவடைந்தது என இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி யுத்தமானது, இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலிங்கார்ட் மற்றும் இல் அலமெய்ன் ஆகிய களமுனைகளில் நாசி படையினர் அடைந்த தோல்விகளுக்கு சமமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் சோவியத் இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போரின் திருப்பு முனைகளாக இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
இல் அலமெய்னிற்கு பிறகு அடைந்த வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என இல் அலமெய்னில் ரொமெலின் இராணுவம் அடைந்த தோல்வியை அப்போதைய பிரித்தானிய பிரதமர் சேர் வின்ஸ்டன் சேர்ச்சில் விபரித்திருந்தமையையும் இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்








