மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே மற்றும் துணை எஸ்.ஐ. துகாராம் ஓம்லே ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருதுகள் வழங்கப்படவுள்ளன. குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.
காமா மருத்துவமனையில் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார் கர்கரே.
பிடிபட்ட தீவிரவாதி அஜ்மர் அமீர் கசாபும் அவனது கூட்டாளியும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உடலில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையிலும் கசாபை பிடித்தவர் துணை எஸ்.ஐ. துகாராம்.
தீவிரவாதத் தாக்குதலில் பலியான அனைத்து 16 காவலர்கள், அதிகாரிகளுக்கும் அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.
ஆனால், கர்கரே மற்றும் துகாராமுக்கு மட்டும் அசோக் சக்ரா விருதுகளையும் துணை கமிஷ்னர் அசோக் காம்டே, எண்கெளடர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளையும் மற்றவர்களுக்கு போலீஸ் விருதுகளையும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.








