ரசனைக்காரன்

January 29, 2009

எம் உறவுகளின் துயர் துடைக்க ஒருங்கினைவோம் வாரீர்!

Filed under: அரசியல் — rasanaikaaran @ 1:32 am
Tags:

n696532154_1849909_9342n696532154_1849907_87492

தோழர் தனுசன்  ராசைய்யாவின் facebook பதிவிலிருந்து எம் உறவுகளின் துயர் துடைக்க சொல்லும் படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்..

நன்றி: தோழர் தனுசன்  ராசைய்யா அவர்களுக்கு!

January 21, 2009

ஹேமந்த் கர்கரேவுக்கு அசோக் சக்ரா விருது

Filed under: அரசியல் — rasanaikaaran @ 8:13 pm

hemantkarkareமும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே மற்றும் துணை எஸ்.ஐ. துகாராம் ஓம்லே ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருதுகள் வழங்கப்படவுள்ளன. குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.

காமா மருத்துவமனையில் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார் கர்கரே.

பிடிபட்ட தீவிரவாதி அஜ்மர் அமீர் கசாபும் அவனது கூட்டாளியும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உடலில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையிலும் கசாபை பிடித்தவர் துணை எஸ்.ஐ. துகாராம்.

தீவிரவாதத் தாக்குதலில் பலியான அனைத்து 16 காவலர்கள், அதிகாரிகளுக்கும் அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

ஆனால், கர்கரே மற்றும் துகாராமுக்கு மட்டும் அசோக் சக்ரா விருதுகளையும் துணை கமிஷ்னர் அசோக் காம்டே, எண்கெளடர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளையும் மற்றவர்களுக்கு போலீஸ் விருதுகளையும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

January 8, 2009

உறவின் முறை செய்திகள்..ஈழத்திலிருந்து …. எண் 3

Filed under: அரசியல் — rasanaikaaran @ 7:44 am

தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (11.01.09) வாரமிருமுறை

இதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:

natesan

பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் சிறிலங்கா வசம் போய்விட்டது புலிகளுக்கு பின்னடைவுதானே..?

கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.

தற்போது நடந்து  வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்…?

யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்

இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு?

முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே சிறிலங்கா அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா…?

வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.

சமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உறித்தெறிந்து சிங்கள படையினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களை பற்றி…?

சிங்கள அரச படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயற்பாடானது சிங்கள அரசின் பேரினவாத சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளை பார்த்தபின்னராவது அனைத்துலக சமூகம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உரிமைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலபரப்பில் தற்போதுள்ள நிலமை என்ன?

எம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகம்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நல்கி வருகின்றனர்.

புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி…?

இந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக சிங்கள இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

சிறிலங்கா ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீள நாம் கைப்பற்றுவதும் வழமை.

புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா?

உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.

புலிகளைவிட  சிறிலங்கா அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே…?

இது எமக்கு மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.

இலங்கை பிரச்சினையில்  இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிறீர்கள்?

சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே… இதில் இருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்து கொள்கிறார்கள்?

முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்குக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?

தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்றார் நடேசன்.

ஈழத்திற்காக தமிழகத்தில் நாங்கள் உறுதுணையாக  என்றுமே இருப்போம்! என உண்மையாக மார்தட்டிக்கொள்ளும் அன்னடங்காட்சி!

December 19, 2008

உறவின் முறை செய்திகள்…. எண் 2

Filed under: அரசியல் — rasanaikaaran @ 10:27 am

இப்படியே எத்தனை நாள் தான்
குடும்ப தகராறை வளர்த்துகொண்டே போவீர்கள்!

இப்ப விஷயம் ரோட்டுக்கு வந்துடுச்சு!

அடுத்த ‘கண்ட’வனும் நமக்கு
அறிவுரை சொல்ல வந்துடான்!

எத்தனை நாள் தான்..
நீ வெட்ட..
அவன் வெட்ட..
என இழுத்துகொண்டே போவீர்கள் ?!

புடிங்கட நம்ம பாகிஸ்தானை!
முடிங்கட நம்ம பங்காளி சண்டையை!

என நீண்ட நாளாய் காத்து இருக்கும்
இந்திய  அன்னடங்காட்சிகள் .

உறவின் முறை செய்திகள் (பக்கத்தில் கடன் வாங்கியது..பரவாவில்லை படியிங்கள்) எண் 1

Filed under: அரசியல் — rasanaikaaran @ 10:08 am

கிளிநொச்சி யுத்தத்தின் பலமும் பலவீனமும்: உலக யுத்த ஆதாரத்துடன் பி. இராமனின் ஆய்வு:

raman_1

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தால் அது அவர்களின் தோல்விக்கான ஆரம்பம் எனக் கொள்ளலாம். அதேநேரம் இலங்கை இராணுவம் இந்தப் போரில் வெற்றி பெற்றால் அது மகத்தான வெற்றியாக இருக்கும் என…

இந்தியாவின் முன்னாள் மேலதிக அமைச்சரவை செயலரும், சென்னையில் உள்ள தென்ஆசிய ஆய்வு (றோ)மையத்தில் பணிப்பாளருமான பி. இராமன் தெரிவித்துள்ளார்.

நடைமுறைப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகள், நன்கு பயிற்சி பெற்ற போராளிகளை கொண்டு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திடமான உறுதியுடன் போரிடுகின்றனர்.

இலங்கை இராணுவத்தினர் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அதிகமான நிதியுதவிளை கொண்டு அதிகமான ஆயுதங்களை கொண்டிருக்கின்றனர்.

எனினும் அவர்கள் நன்கு பயிற்றப்படாத திடமில்லாத வீரர்களையே கொண்டிருப்பதாக இராமன் குறிப்பிட்டுள்ளார்

கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதல்களின் போது படைத்தரப்பு அதிக இழப்புகளை சந்தித்தது. இரண்டு தரப்பும் இந்த மோதல் குறித்து தமக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டன. எனினும் இறுதியில் படைத்தரப்பின் தகவல்களை காட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவல் உண்மையானவையென புலனாவதாக இராமன் குறிப்பிட்டுள்ளார்

கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தில் படையினர் இருப்பதாகவும் “கிளிநொச்சியை புதுவருடத்திற்கு முன்னர் கைப்பற்றுவோம்” என இலங்கையின் இராணுவத் தளபதி கூறியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டியுள்ள இராமன், தற்போது சூழ்நிலையில் பயிற்றப்படாத இளம் வீரர்களை பயன்படுத்தி கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தை அவர் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கிளிநொச்சி சாவை முத்தமிடும் இடமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் உறுதிமொழியை ஒத்த உறுதிமொழியையே தென்கொரிய வடகொரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தென்கொரியாவின் தளபதி டக்ளஸ் மெக்ஆதர் தமது படைவீரர்களிடம் நீங்கள் கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு செல்லலாம் என கூறியிருந்தார்.

எனினும் கிறிஸ்மஸ் வந்தது.கிறிஸ்மஸ் சென்றது. சீனாவும் வடகொரியாவும் தொடர்ந்தும் கடும் சண்டையில் ஈடுபட்டன. பொதுமக்கள் தென்கொரிய தளபதி கூறிய கிறிஸ்மஸ் எந்த கிறிஸ்மஸ் என கேள்வி  எழுப்பினர்.

இறுதியாக அந்த யுத்தம் எந்த தரப்புக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி இரண்டு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான  உயிர்கள் பலியானதுடன் முடிவடைந்தது என இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி யுத்தமானது, இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலிங்கார்ட் மற்றும் இல் அலமெய்ன் ஆகிய களமுனைகளில் நாசி படையினர் அடைந்த தோல்விகளுக்கு சமமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் சோவியத் இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரின் திருப்பு முனைகளாக இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

இல் அலமெய்னிற்கு பிறகு அடைந்த வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என இல் அலமெய்னில் ரொமெலின் இராணுவம் அடைந்த தோல்வியை அப்போதைய பிரித்தானிய பிரதமர் சேர் வின்ஸ்டன் சேர்ச்சில் விபரித்திருந்தமையையும் இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்

அன்னாடங்காட்சி .. எண் 3

Filed under: அரசியல் — rasanaikaaran @ 7:42 am

ஒட்டு கேட்பதும்..
ஓட்டு கேட்பதும்..

இரண்டுமே
(காங்கிரஸ்)
ஆட்சியாளர்களின் பண்பு!

ஒட்டு கேட்பது..
தெரிந்தும் அவர்களுக்கே
ஓட்டு போடுவது..

இந்திய
மாக்களின் இயல்பு!

என்ற தீவிர சிந்தனையில்
அன்னாடங்காட்சி!

செய்தி : காங்கிரஸ் இரண்டு மாநிலத்தில் வெற்றி

அதையும் நம்ம அன்னாடங்காட்சியின் பார்வையில்…

டெல்லி – மீண்டும் நல்லாட்சி தருவோம் என்று பிச்சை எடுத்தது!
ராஜஸ்தான் – நல்லாட்சி தருவோம் என்று அடுத்தவர்  பிச்சை  தட்டில் பிடிங்கி தின்றது!
மொத்ததில்  பிட்சை கட்சி வென்றது! மன்னிக்கவும்  காங்கிரஸ்  கட்சி வென்றது!

December 18, 2008

அன்னாடங்காட்சி..

Filed under: அரசியல் — rasanaikaaran @ 11:45 pm

சோத்துக்கே வழியில்லை
சொர்கத்துக்கு வழிக் கேட்கிரானுங்க

மெத்த படித்த மேதாவிகளும்
சொரண்டி திங்கும் அரசியல்வாதிகளும்..!

இப்படிக்கு
வாழ்க்கையை  பகுத்தறிந்த
அன்னாடங்காட்சியாக
வாழும்
என் இந்திய குடிமக்கள்

« Previous Page

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.