எவன் எக்கேடுக்கெட்டு போனா நமக்கு என்ன என்ற சமூக உணர்வுடன்..
தரடிக்கெட் பார்வையில் நையாண்டி மேளதாளத்துடன்..இன்றைய அரசியல் நிலவரங்களை
அலசுகிறோம்!
எவன் எக்கேடுக்கெட்டு போனா நமக்கு என்ன என்ற சமூக உணர்வுடன்..
தரடிக்கெட் பார்வையில் நையாண்டி மேளதாளத்துடன்..இன்றைய அரசியல் நிலவரங்களை
அலசுகிறோம்!
தமிழ் சினிமாவில் இந்த 2010ல் அதிகப்படங்கள் வெளிவந்தாலும்..வெகு குறைவான படங்களே மக்களின் மானசீக ஆதரவைப் பெற்றது..சில புதிய முயற்சிகள் மீடியாவின் விளம்பர சூழ்ச்சிகளையும் மீறி ஓடியது என்பதே பெரிய சாதனை..அவற்றில் நாங்கள் தேர்வு செய்த படங்களை 2010ல் சிறந்த படைப்பாக இங்கே வெளியிட்டுவுள்ளோம்..மேலும் மக்களின் ஆதரவைப் பெற்ற பல வழக்கமான மசாலாப்படங்களையும் நமது கணிப்புகளில் இணைத்துள்ளோம்..
விருதுக்குழு 2010:
தர டிக்கெட், ரசனைக்காரன் விமர்சன குழு மற்றும் நண்பன் தமிழ்குமார்( சிங்கப்பூர்)
தமிழ் சினிமாவில் இந்த 2010ல் ஒரு சில படங்களை தவிர பெரிதாக பாடல்கள் மக்களை கவரவில்லை என்பதே உண்மை. திரை இசை துறையில் புதிய முயற்சிகளும் அவ்வாரே! அவற்றில் ஹிட்டான பாடல்களை மட்டுமே இங்கே வரிசை படுத்தியுள்ளோம்.. Melody வரிசையை காதலர்களுக்கு பிடித்த பாடல் கேட்டு பெற்று அதன் அடிப்படையிலயே இங்கே வரிசை படுத்தப்பட்டுள்ளது.
விருதுக்குழு 2010:
தர டிக்கெட், ரசனைக்காரன் விமர்சன குழு மற்றும் நண்பர்கள் [ (கலைவாணி (மலேசியா), அனிலா நாயர்(கேரளா), ஹம்சா வாமணன், சதிஸ்ராஜ், விக்னேஷ் சுகுமாரன், நந்தேஷ், சேகர் (ஹோசூர்) ]
நம்ம தரடிக்கெட்டுக்கு ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்..அதுவும் சிங்கரா சென்னைய பத்தி..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-பத்மஸ்ரீ கமல்ஹசன் யுகங்களுக்கு பிறகு, (இனிமேல்) இயக்குனர் கைகளில் தான் தமிழ் சினிமா. நாங்கள் சொல்லவில்லை மக்கள் அப்படி நினைக்கிறார்கள். அவ்வாறு இனி வரவிருக்கும் திரைப்படங்களில் ஒரு ரசனைக்காரனாக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்கள்..இதோ..
பாலாவின் அவன் இவன்
இந்தப்படத்திற்கு பெருசா விளம்பரமே தேவையில்லை.. பாலா அண்ணாச்சியின் படம்..
மொத்த இந்தியாவே அரள வைக்கும் என்பதில் ஐய்யமில்லை. எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் வசனத்தில்,
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவில். ஆர்யா, விஷால்,GK,ஜனனி அய்யர்,மது ஷாலினி மற்றும் கௌரவ
தோற்றத்தில் சூர்யாவும் நடிக்கிறார்கள்..யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஆரண்ய காண்டம்
AR முருகதாஸின் ஏழாம் அறிவு
சுசீந்தரனின் அழகர்சாமியின் குதிரை
பிரபு சாலமனின் மைனா…
காட்சிகளும் பசுமையுடன் ஈர்க்கிறது..
சினிமா என்கிற கலையும் ஒரு ரசனைக்காரனை பொறுத்தவரை ஒரு அழகான காதலுக்கு உரிய எதிர்பார்ப்புகள் தான்.இவற்றில் சில படங்கள் காப்பியங்களாக இருக்கலாம்..எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் இருந்தால் சரி!!
இயக்குனர் மனோகர் ரெட்டி
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டிங் லோகேஸ்வரன்
சப்த வடிவமைப்பாளர் சத்யராஜ்
இசை தீனா
தயாரிப்பு : LV பிரசாத் பிலிம் டிவி அகாடமி
சென்ற வருடம் முதல் தமிழ் குறும்படங்கள் பெரிய தாக்கத்தை கலையுலகில் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது. அவற்றில் என்னை மட்டுமல்ல பலரையும் ஒரு கிராமத்து வாழ்வியலுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்ட ஒரு குரும்ப்படமேன்றால் அது ‘தி போஸ்ட்மன்’ தான். இந்த அழகான குரும்படத்தை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லை, படத்தின் காட்சிகளே நம் இதயத்தை எளிதாக அந்த வாழ்வியலின் வலிகளுக்குள் இணைந்து கொள்ளும். முத்தாய்ப்பாக இந்த வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஸ்வர்ண கமல் தேசிய விருதினை தமிழுக்கு பெற்று தந்துள்ளது, ‘தி போஸ்ட்மன்’.
‘தி போஸ்ட்மன்’ குரும்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்
ரசனைக்காரனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
காக்கைகளும், ஓநாய்களும், ஏன் தெருநாய்களும்
கலையை திருடிப் பிழைக்கும் இவ்வேளையில்
நிமிராய் சமுக அவலங்களை படம் பிடித்து
இது தாண்டா தமிழ் சினிமாவின்
இன்னுமொரு பரிமாணம் என்று
ரசிகர்கள் எங்களை பெருமிதம் கொள்ள வைத்த
எம் காலத்து கலையுலக பிதாமகனுக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
உலகமே ரசித்தது என்று சொல்லியாக வேண்டும் ”காதலில் சொதப்புவது எப்படி? என்கின்ற குறும்படத்தை!
அவ்வளவு ரசிக்கும் படியான நடிப்பு,நேர்த்தியான திரைக்கதை, இளமையான ஒளிப்பதிவு, திறமையான இயக்கம் என்று அணைத்து துறைகளிலும் அழகாகவே உழைத்து அசத்தியிருந்தார்கள், இந்த இளம் படக்குழுவினர்! தனியார் தொலைகாட்சியில் ஏற்கனவே புகழ் பெற்று, Facebook, orkut ஆகிய சோஷியல் தளங்களில் அணைத்து தரப்பினராலும் சமீபத்தில் அரவணைக்கப்பட்ட குறும்படங்களில் இதுவும் ஒன்று. இயக்குனர் பாலாஜி, ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நடிகர் அதித் மற்றும் படக்குழுவினர் அனைவருமே மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்! அனைவருக்குமே வாழ்த்துக்கள் தலைவா!
அவர்களுடைய அடுத்த வெளியீடான.. “மிட்டாய் வீடு”
உளவியலை பிரதான பின்னணியில் கதையை பின்னுவதில் பாலாஜி கெட்டிகாரர் என்று நிருபித்திருக்கிறது
அவரது இரண்டாவது முயற்சியும். மீண்டும் மிட்டாய் வீட்டிலும் கொஞ்சம் உளவியல் வகுப்புகள் எடுப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தினாலும் பார்பவரை ஈர்க்க எந்த விகிதத்திலும் தவறவில்லை இயக்குனர் பாலாஜி மற்றும் அவரது படக்குழுவினர்!
Theme: Rubric. Blog at WordPress.com.