ரசனைக்காரன்

சினிமா

தமிழ் சினிமா?

அண்ணாச்சி திரு. கமல் ஹாசன் கூறியது போல இனிமேல் தமிழ் சினிமா உலகை, கோலிவுட் என்று அசிங்கமாக அழைக்காமல் ‘தமிழ் சினிமா’ என்றே பெருமையாகவே கூறுங்கள்!

ஏன் என்றால் நமக்கு கிடைத்த, கிடைத்திருகின்ற ஜாம்பவான்களை போல இந்தியாவில் வேறு எங்குமில்லை.. ஆனால் அதனால் தமிழ் சினிமா சாதித்தது என்ன?

ஒன்று.. இரண்டு..மூன்று…ஹூம் நான்கு என்ற இந்த வரிசையில் சின்ன பிள்ளைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களை எடுத்ததற்கு கண்மூடித்தனமாக மார்தட்டி கொள்ளலாம் என் தமிழர்களே!

அவைகளில் பராசக்தி, அபூர்வ ராகங்கள், 16 வயதினலே, முள்ளும் மலரும், அவள் அப்படி தான், உதுரிப்பூக்கள், மோகமுள், பொற்காலம், சேது, அழகி, பிதாமகன், ஒன்பது ரூபாய் நோட்டு, வெயில், பூ ஆகிய சில படங்களை மட்டும் தான் ஆச்சு அசல்லான தமிழ் சினிமாக்கள் என்று நம்முடைய  திரை சீலைகளில் மட்டுமில்லை உலக திரை சீலைகளிலும்  அலங்கரிக்கும்..நம் கற்பனை திறணை..

தொழில் நுட்பம்..அது  நமக்கு பெரிய வார்த்தை.. இப்போது!!

சரி..மீதி எடுத்தவை?!!

பலரின் குடும்பங்களை வாழவைத்திருக்கின்றன.. தொழில் நடத்தி, லாபம் பார்த்து, வாழ்வு அளிப்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பெரிய விஷயம்! அதற்காக வாழ்த்துக்கள் தான் சொல்ல வேண்டும்!

அதை விட்டுட்டு.. உலகில் முதல் முறையாக..ஹாலிவுட்டையும் பின்னுக்கு தள்ளி..தமிழனுக்கே பெருமை..இனிமேலும் அந்த புளிச்சு போன கதைகளை சொல்லுவதை நிறுத்துங்கள்!.. அப்படி சொல்லி எடுத்த பெருபாலான திரைப்படங்கள் ஹாலிவுட்டின் copyயல்ல உலக சினிமாவின் அப்பட்டமான மறுபதிவுகள்!

மானக்கேடு… அதற்கெல்லாம் மதிக்கதக்க இந்தியாவின் திரைப்படங்களுக்கான தேசிய விருது!

ஆனால் ஹாலிவுட் மற்றும் ஆஸ்கார் எல்லாம் தமிழர்களுக்கு நிலா தொடும் சாதனையல்ல இன்னும் அம்மாக்கள் ஆசைகாட்டும் நிலச்சோறு ஊட்டும் கதை தான்!

முக்கியமாக..

படிக்காதவர்கள் copy அடிக்கிறார்கள்..  (அப்பட்டமாக ஹாலிவுட் படங்களை பார்த்து)
படித்தவர்கள் பிட் அடிக்கிறார்கள்.. (திருட்டுதனமா ஜப்பானிய கொரியா ஜெர்மானிய முதலிய வெளிநாட்டு  படங்களை பார்த்து)

உங்கள்ளில் ஒருவருக்கொருவர் குறைகூரி மறுபிரதி,மறுபதிவு   எடுக்காமல்  ..உலக அரங்கில் மீண்டும் தமிழரின் மானதை வாங்காமல்.. (நிழல் +) உலகத்துகே தலைவர்கள் போல அரிதாரம் பூசி  வாழும் நிஜ கோமாளிகளை நம்பி அவர்கள் பின் பெருமை பேசி நிற்காமல்..

நமது இலக்கியங்களை ஆராயுங்கள், நம் தற்போதைய சமூகவியலை உற்று பாருங்கள்  உருவாகும் கலை..உலகமே அடிமையாகும் உங்கள் உலக சினிமாவிற்கு..

முடியாதது என்று ஒன்றுமில்லை,

கதையை நம்பி..கதையாசிரியர்களை நம்பி.. இயக்குனர்களை நம்பி..

முக்கியமாக தரமான படங்களை விரும்பும் உங்கள் ரசிகர்களான எங்களை நம்பி படங்கள் எடுங்கள்..

அப்படி முயற்சி செய்யுங்கள்..
திருவினையாகும் உலக சினிமாவில்..

தமிழ் சினிமா!

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: