ரசனைக்காரன்

June 24, 2010

நீ கண்ணதாசனா..கண்ணன் தான் உனக்கு தாசன்!

Filed under: Uncategorized — rasanaikaaran @ 12:14 pm

கண்ணதாசனா?..
கண்ணன் தான் உனக்கு தாசன்!
என்று பல தடவை
பெருமிதம் கொண்டு இருப்பாய்!
வரலாறும் தவறில்லை
என்று உன்னை அரவணைத்து இருக்கும்!

நீ என்ன கண்ணதாசனா??
அவன் அல்லவா உனக்கு தாசன்!!

பிருந்தாவனது கண்ணனே
மயங்கி கிடந்தானே காலங்காலமாக,
அவன் கோபியர்களை
நீ உன் வார்த்தையால்

உன் வர்ணனையால்
மயக்கி கடத்தியபோது(களவாடியபோது)..
நாங்கள் எமாத்திரம்?!

உலக காதலர்களின்
பெருந்தலைவர்களில்
நீயும் ஒருவன்

உனக்கு இன்று
பிறந்தநாள்…

வாழ்த்தவில்லை..

மாறாக காதலிக்கிறோம்
உன் வார்த்தைகளை.. காலங்காலமாக!

……….ரசனைக்காரன்

Advertisements

June 2, 2010

isai alias isaignani இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Filed under: Uncategorized — rasanaikaaran @ 6:49 am

isai alias இளையராஜா|
ഇളയരാജ| ఇళయరాజా|ಇಳಯರಾಜ | इलायाराजा |Ilayaraja | الرجا

உன் இசை
நான் உணரும் போதெல்லாம்
என் உயிரின் கண்ணீர் துளிகள்
உன் இசைப்பாதங்களை
என்றென்றும்
தழுவி..தொழுது..ஏங்கி.. நிற்க
நீ வாழும் காலத்தே
உன் பெயருடன் அடிமையாய்
என்னை அனுப்பிவைதானோ
…அந்த இறைவன்?

…ரசனைக்காரன்

Blog at WordPress.com.